MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஸ்மார்ட் முதலீடுக்கு சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! 3 மடங்கு வருமானம் நிச்சயம்!

ஸ்மார்ட் முதலீடுக்கு சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! 3 மடங்கு வருமானம் நிச்சயம்!

Post Office Special Scheme: நீங்கள் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை தபால் நிலையத்தில் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகையை மூன்று மடங்காகக்கூட உயர்த்தலாம். ரூ.5 லட்சத்தை முதலீடு செய்து ரூ.15 லட்சக்கும் அதிகமாகப் பெறுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : SG Balan
| Updated : Feb 16 2025, 08:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Post Office Special Scheme

Post Office Special Scheme

​​ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையைத் ஏற்படுத்தித் தர நினைக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்கள் அனைத்து வகையான நிதித் திட்டமிடல்களையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தையின் பெயரில் PPF, சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். அதே நேரத்தில் சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்காவது ஒரு பெரிய தொகையை முதலீடு செய்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Post Office Schemes

Post Office Schemes

நீங்களும் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபிஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். போஸ்ட் ஆபிசில் 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கிகளை விட சிறந்த வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், மூன்று மடங்குக்கு மேல் வருமானம் ஈட்டலாம். அதாவது ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ரூ.15 லட்சத்துக்கு மேல் முதிர்வுத்தொகை பெறலாம். அது எப்படி என்பதை அறிந்துகொள்ளலாம்.

36
Post Office Time Deposit Scheme

Post Office Time Deposit Scheme

5 லட்சத்தை 15 லட்சமாக மாற்ற, நீங்கள் முதலில் ரூ.5 லட்சத்தை தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் 5 வருட FD க்கு 7.5 சதவீத வட்டி வழங்குகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய வட்டி விகிதத்துடன் கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.

46
Post Office Fixed Deposit Scheme

Post Office Fixed Deposit Scheme

இந்தத் தொகையை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க வேண்டும். 10 ஆண்டுகளில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டி மூலம் ரூ.5,51,175 வருமானம் சம்பாதிக்கலாம். 10 வருடம் கழித்து ரூ.10,51,175 முதிர்வுத் தொகை சேரும். அதாவது முதலீடு செய்த தொகை இரு மடங்கிற்கும் அதிகமாகும்.

56
Post Office Scheme Benefits

Post Office Scheme Benefits

இப்போது FD முதலீட்டை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த 5 லட்ச ரூபாய் பணத்துக்கு வட்டியாக ரூ.10,24,149 சேரும். இத்துடன் முதலீடு செய்த ரூ.5 லட்சத்தையும் சேர்த்தது மொத்தம் ரூ. 15,24,149 கிடைக்கும்.

 

66
Post Office FD Interest Rate

Post Office FD Interest Rate

15 லட்சம் தொகையைச் சேர்க்க, நீங்கள் தபால் அலுவலக FD-ஐ இரண்டு முறை நீட்டிக்க வேண்டும். இதற்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. தபால் அலுவலக 1 வருட FD-ஐ முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்க முடியும், 2 வருட FD-ஐ முதிர்வு காலத்திற்குள் 12 மாதங்களுக்குள் நீட்டிக்க வேண்டும். அதேசமயம் 3 மற்றும் 5 வருட FD-ஐ நீட்டிக்க, முதிர்வு காலத்திற்குப் பிறகு 18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, கணக்கைத் திறக்கும் நேரத்தில் முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்கக் கோரலாம். முதிர்வு நாளில் அந்தந்த TD கணக்கில் பொருந்தும் வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்குப் பொருந்தும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தபால் அலுவலகத் திட்டம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved