மீண்டும் மின் கட்டணம் உயர்வு! சாமானிய மக்களுக்கு இன்னொரு ஷாக் கொடுத்த தமிழக அரசு!
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 0-400 யூனிட் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 லிருந்து 20 காசுகள் அதிகரித்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.
401-500 யூனிட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 என்பதில் இருந்து ரூ.6.45 ஆக அதிகரித்துள்ளது. 501 முதல் 600 யூனிட் மின் நுகர்வுக்கு ரூ.8.15 கட்டணம் பெறப்பட்ட நிலையில், இப்போது ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 601-800 யூனிட்டுகளுக்கு ரூ.9.20 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.9.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து ஆவணங்கள் விட்டதா? அசல் பத்திரம் தொலைந்து போனால் செய்ய வேண்டியது என்ன?
801-1000 யூனிட்டுக்கான மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 ஆக இருந்தது. இப்போது 50 காசுகள் அதிகரித்து ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 1000 யூனிட்டுக்கு அதிகமான மின் நுகர்வுக்கான கட்டணமும் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 லிருந்து 55 காசுகள் கூடி, ரூ.11.80 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் இந்த மின்கட்டண உயர்வு எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் சாமானிய மக்களும் சிறு குறு தொழில்கள் செய்வோரும் பாதிக்கபடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இது திமுக அரசின் தொடர் மக்கள் விரோத போக்கைக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவு இல்லையா? அண்ணாமலைக்கு பதில் சொன்ன தமிழக அரசு!