Asianet News TamilAsianet News Tamil

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Election commission order to take action against Karnataka BJP minister Shobha Karandlaje for her vile comments against tamilnadu smp
Author
First Published Mar 20, 2024, 7:54 PM IST | Last Updated Mar 20, 2024, 7:54 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, பெங்களூரில் தொழுகை நேர பாங்கு ஒலிக்கும்போது அனுமன் பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்ட கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அம்மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் தடுப்பு காவலில் சிறை பிடித்தனர்.

அப்போது பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா, இந்த விவகாரத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பேசினார். அத்துடன், ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து சிலர் எங்கள் கஃபேவில் வெடிகுண்டு வைத்து விட்டு சென்று விட்டனர்.’ என போகிற போக்கில் ஆதாரமின்றி தமிழ்நாடு மீது அவதூறு பரப்பியுள்ளார்.

அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் பாஜக மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு!

மேலும், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் குண்டு வைக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீது திமுக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி தாம் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios