Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami is the only one who has the right to be Prime Minister - Former Minister Sellur Raju
Author
First Published Jun 24, 2023, 2:29 PM IST

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரும் போகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் போட்டி. திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருந்தவர், அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதே போல் எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்.

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழர் பிரதமராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். 2014-ல் லேடியா? மோடியா? என கேட்ட போது மக்கள் அவ்ருக்கே வாக்களித்தனர். அது போல எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து, அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செல்லூர் ராஜு பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய், தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்தார்.  யார் யாரோ பிரதமர் என்றும், முதலமைச்சர் என்று சொல்லி கொள்கின்றனர். அப்படி இருக்கும் போது விஜய் ஏன் வரக்கூட்டது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. எங்களுக்கு போட்டி திமுக தான்” என்று தெரிவித்தார்.

25% மறைமுக மின் கட்டண உயர்வா? எது நடக்கக்கூடாது நினைச்சேனோ அது நடக்க போகுது! அலறும் ராமதாஸ்..!

Follow Us:
Download App:
  • android
  • ios