அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? இதுதான் மெகா கூட்டணியா இபிஎஸ்.. கே.சி. பழனிசாமி விளாசல்!
கடந்த 4 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக அதிரடியாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று முழக்கமிட்டது இதற்கு தானா? என கே.சி. பழனிசாமி காட்டாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக அதிரடியாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதன்படி அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது.! பாஜகவில் இணைந்தது ஏன்.? சரத்குமார் விளக்க அறிக்கை
தற்போது வரை அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திடீரென மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாய புலிகள் கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கிண்டல், கேலி மற்றும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எல்லா கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஏங்கி தவம் இருந்த நிலையில் இருந்த அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? என கே.சி. பழனிசாமி புலம்பியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எல்லா கட்சிகளும் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க ஏங்கி தவம் இருந்த நிலையில் இருந்த அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று முழக்கமிட்டது இதற்கு தானா? கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கும் போதே அவரால் ஓ.பி.எஸ் என்ன கதிக்கு ஆளானார் என்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: EPS vs OPS : இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்... அடித்து கூறும் ஓபிஎஸ்- அதிர்ச்சியில் எடப்பாடி