மனைவியிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது.! பாஜகவில் இணைந்தது ஏன்.? சரத்குமார் விளக்க அறிக்கை

திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள் என சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 

Sarathkumar has issued an explanatory statement on joining the BJP

திமுக ஆட்சி வருவதற்கு எனது பங்கு உண்டு

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததையடுத்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை வெளியிட்டுள்ளார்.

 

திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது. எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல் எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sarathkumar has issued an explanatory statement on joining the BJP

அறிவும், ஆற்றலும் இருப்பவர்

அதன் பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கும், திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்.

குஷ்பு புகைப்படத்தை எரிக்க முயன்ற திமுகவினர்.!! பெண் எம்எல்ஏ சேலையில் தீ பிடித்ததால் பதற்றம்

Sarathkumar has issued an explanatory statement on joining the BJP

மக்கள் சேவையில் அர்பணிப்பு

அதன் பிறகு 2007 - ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பல மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன். எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.

Sarathkumar has issued an explanatory statement on joining the BJP

பாஜகவுடன் இணைந்தது ஏன்.?

ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.

Sarathkumar has issued an explanatory statement on joining the BJP

மனைவியிடம் கருத்து கேட்டது தவறா.?

என் வளர்ச்சியிலும் இன்ப, துன்பங்களிலும் என்னுடன் பயணித்து, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஓர் வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து, மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம். மனைவியிடம் கருத்து கேட்டதாக கூறுகிறார்கள். மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பார்கள். மறைந்திருந்து தாக்க வேண்டாம். நேரில் வர வேண்டும். யாரையும் தரக்குறைவாக பேசுபவன் நான் கிடையாது. பேசியதும் இல்லை.  ஒரே ஒரு நிர்வாகி அவசரப்பட்டு வார்த்தையை விட்டார். பின்னர் அவரே தெரியாமல் சொல்லிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதாகவும் சரத்குமார் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு! தமிழகத்திற்கு மோடி கொடுத்த திட்டம்.?- ஸ்டாலின் கேள்வி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios