தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், திமுகவும் தனது கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. 

BJP cannot win in Tamil Nadu : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலமே உள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி நிலவரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணியானது முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தனது தலைமையிலான கூட்டணியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டி இன்று தமிழகம் வரவுள்ளார். பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது பெருமை என்று திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை மேம்பால பணிகள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, கொளத்தூர் ரெட்டேரி சாலையில் உள்ள ஏரியை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த வகையில் 7 மீட்டர் அகலமும், 600 மீட்டர் நீளமும் கொண்ட நடைப்பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 139 கோடி ரூபாய் செலவில் பாடி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை மேம்பாலம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,

 நேற்று முன்தினம் கூட சைதாப்பேட்டை மேம்பால பணிகளை மூன்று கிலோமீட்டர் நானே நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டோம். பொங்கல் தினத்தில் சைதாப்பேட்டை மேம்பாலத்தை முதலமைச்சர் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். திமுகவின் உருட்டுக்கள் பலவிதம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கையில், அதிமுக ஆட்சியில் நடைபெறுவதை மீண்டும் நினைவுபடுத்துகிறார்.

எடப்பாடியின் தமிழக சுற்றுப்பயணம்

யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதை தான் பார்க்க வேண்டும். அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி மக்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது என தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது என கூறினார்.

தங்கள் அடையாளத்தை காட்டிக் கொள்வதற்காக மக்கள் மறந்துவிடக்கூடாது வெளியே வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள் எங்கள் அணி 200க்கு 200 வெற்றி பெறும் என கூறினார். எதிர்கட்சித் தலைவர் நாங்கள் அவரை மதிக்கிறோம் தனது அடையாளத்தை காட்டி கொள்வதற்காக அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த சம்பவங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் பேசுவதில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை

பிரதமர் மோடி தமிழகம் வருகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வந்தார். சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது அதற்காக வருவார். இந்த மண் திராவிட மண், பெரியார் அண்ணா கலைஞர் என மும்மூர்த்தி பண்பட்டு உள்ள மண் எந்த காலத்திலும் பிரதமர் வந்தாலும் அவரின் சகாக்கள் வந்தாலும் காவிகள் காலூன்ற முடியாது என தெரிவித்தார்.