உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்..! விண்ணப்பம் பதிவேற்றுவதில் பிரச்சனையால் பாதிப்பு
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை
அதிமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு இருந்தாலும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையின் காரணமாக தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து புதிதாக பதவியேற்ற திமுக அரசு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டம் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வருபவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salem : கடல் கடந்த காதல்..பிரான்ஸ் நாட்டு மணமகனை திருமணம் செய்த சேலத்து மணமகள் !
பிளஸ் 1 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் எப்போது பெறலாம்..? அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..
இணையதளத்தில் பிரச்சனை
தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை திட்டத்தின் கீழ் 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகள் https://penkalvi.tn.gov.in இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களில் ஏராளமான மாணவிகள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்த காரணத்தால் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டு சர்வர் டவுன் ஆனது. இதனால் மாணவிகள் பாதிப்படைந்தனர். 1000 ரூபாய் பெறுதவற்கு 30ஆம் தேதி கடைசி நாட்களாக இருப்பதால் தமிழக அரசு தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
நவி மும்பை தமிழ்ச்சங்க கட்டிட விரிவாக்கம் பணி..! ரூ.50 லட்சம் வழங்கினார் தமிழக முதலமைச்சர்