தமிழ்நாடு போக்குவரத்து ஒட்டுநர்கள், நடத்துநர்கள் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு போக்குவரத்து ஒட்டுநர்கள், நடத்துநர்கள் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில்,”போக்குவரத்து ஓட்டுநர்கள்‌, நடத்துநர்கள்‌ உரிய பேருந்து நிறுத்தத்தில்‌ தான்‌ நிறுத்த வேண்டும்‌. பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ, சாலையின்‌ நடுவிலோ அரசுப்‌ பேருந்துகளை ஓட்டுநர்கள்‌ நிறுத்தக்‌ கூடாது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா...! ஒரே நாளில் 1000ம் பேருக்கு பாதிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

மேலும்‌ பேருந்து நிறுத்தத்தை விட்டு தள்ளி பேருந்தை நிறுத்துவதால்‌, பயணிகள்‌ பேருந்து ஓடிவந்து பேருந்தில்‌ சிரமப்படுகிறார்கள்‌ எனவும்‌, அப்படி ஓடிவந்து பேருந்தில்‌ ஏறும்போது பயணிகள்‌ கீழே விழுந்து காயங்கள்‌ ஏற்படும்‌ சூழ்நிலையும்‌, சில்‌ நேரங்களில்‌ மரணங்கள்‌ தொடர்பான விபத்துகளும்‌ ஏற்பட ஏதுவாகிறது.எனவே, அனைத்து ஓட்டுநர்‌, நடத்துநர்களும்‌ உரிய பேருந்து நிறுத்தத்தில்‌ மட்டும்‌ பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்‌ என அந்த உத்தரவில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை.. மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை போட்ட உத்தரவு.. மீறினால் நடவடிக்கை