Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா...! ஒரே நாளில் 1000ம் பேருக்கு பாதிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

In Tamil Nadu, corona infection has been confirmed in 1000 people in a single day
Author
Tamilnadu, First Published Jun 24, 2022, 11:54 AM IST

அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது தமிழ்நாடு,கேரளா, டெல்லி, கர்நாடகம், , அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, உள்ளிட்ட  10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலில் இருந்து மக்கள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். இந்தநிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால்  தமிழக சுகாதாரத்துறை துறை கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.

In Tamil Nadu, corona infection has been confirmed in 1000 people in a single day

ஒரே நாளில் 1063 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 25 முதல் 50 வரை மட்டுமே பதிவாகிவந்த நிலையில், தற்போது  தற்போது 1063 பேருக்கு கொரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5174 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 190 பேருக்கும், திருவள்ளூரில் 63 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிர் இழப்பு ஏற்படாத காரணத்தால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்தநிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக்கவசம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான அனைது்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இதையும் படியுங்கள்

அலர்ட் !! தமிழகத்தில் வேகமாக பரவும் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ்.. அமைச்சர் எச்சரிக்கை..

Follow Us:
Download App:
  • android
  • ios