செல்லப்பிராணி வளர்ப்பு, தெருநாய் நலன் மற்றும் கருணையுள்ள சமூக வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன்முறையாக நாய் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் நாய்களுக்கான DOG WALKATHAN : செல்லப்பிராணி வளர்ப்பு, தெருநாய் நலன் மற்றும் கருணையுள்ள சமூக வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன்முறையாக தனித்துவமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக Wag & Walk Dog என்ற பெயரில் நாய் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை வானகரத்தில் பள்ளியில் நடைபெற்ற, வாக் அண்ட் வாக்-டாக் வாக்கத்தான் நிகழ்வை, PEPHANDS அறக்கட்டளை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் கால்நடை வளர்ப்பு, சமூக நலன் மற்றும் விலங்கு பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
தெருநாய்களை பாதுகாத்திட விழுப்புணர்வு
இதில் வெளிநாட்டு ரக நாய்களான லேப்ரோடாக், புல்லிகுட்டான்,ஷிட்ஷூ,பாக்சர்,கோல்டன் ரிட்ரீவர்,பாடுல் மற்றும் இந்திய ரகத்தை சேர்ந்த சிப்பிபாரை,கன்னி, ராஜபாளையம் உள்ளிட்ட நூறுக்கும்மேற்பட்ட நாய்களுடன் செல்லப்பிராணி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர். பொறுப்பான செல்லப்பிராணி உரிமை மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கவும்
தெருநாய்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமூகங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே வலுவான, கனிவான பிணைப்பை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கம் என இந்த நிகழ்விற்கான ஏற்பாடு செய்த PEPHANDS அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
