இவ்வளவு பெரிய தொகையை மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ-வுமான துரை சந்திரசேகரன் கட்டுவதா? மேயர் சண் ராமநாதன் கட்டுவதா? என்கிற போட்டி நிலவுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் திமுக தலைவி அலுவலகமாக தஞ்​சாவூர், முத்​துக்​கு​மார மூப்​ப​னார் சாலை​யில் திமுக மாவட்ட அலு​வல​க​மான கலைஞர் அறி​வால​யம் உள்​ளது. 15 வருடங்களுக்கு முன்பு தஞ்சை ஆத்து பாலத்திற்கு அருகில் இந்த அறிவாலயம் கட்டப்பட்டது. கலைஞர் கருணாநிதியே இதை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மட்டுமன்றி அப்போது ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களுக்குமே இந்த அறிவாலயம்தான் தலைமை கழகமாக இருந்தது.

ஆனால், இந்த அறிவாலயம் கட்டியதிலிருந்து இதுவரை அந்த கட்டிடத்திற்கு சொத்து மற்றும் பாதாள சாக்கடை வரி கட்டாமல் இருக்கிறார்கள். இப்போது வரை அறிவாலய கட்டிடத்திற்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை 34 லட்சத்து 46 ஆயிரத்து 396 ரூபாய் என தஞ்சை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கட்டவில்லை என்று தஞ்சாவூர் மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் வரி கட்டாதவர்களின் பட்டியலில் அறிவாலத்தையும் சேர்த்துள்ளார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் தஞ்சாவூர் அறிவாலயம் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பெயரில் இருக்கிறது. இவர் பெயரை திமுக செயலாளர் என குறிப்பிட்டு சுமார் 35 லட்சம் பாக்கி என்று மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. ஒரு வருஷத்திற்கு சராசரியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரி போடப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியதற்கு பிறகு அதாவது 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு, வருடத்திற்கு மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வரியாகப் போட்டுள்ளார்கள்.

இதற்குக் காரணம் யார் என் என்கிற விசாரணையை திமுக தீவிரப்படுத்தி இருக்கிறது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பல வாரங்களாகியும் இன்னும் வரி செலுத்தவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி இப்போது திமுக வசம்தான் இருக்கிறது. திமுக தரப்பில் விசாரணை செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் வரிப்பாக்கியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யார்? என்று நிர்வாகிகள் துப்பு துலக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனை கோர்த்து விடுவதற்காக மேயர் சண் ராமநாதன் இந்த வேலையை செய்திருப்பதாக விசாரணை நடந்து கொண்டு வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையை மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ-வுமான துரை சந்திரசேகரன் கட்டுவதா? மேயர் சண் ராமநாதன் கட்டுவதா? என்கிற போட்டி நிலவுகிறது. தஞ்சாவூர் மாவட்ட ‘உடன்பிறப்பே வா’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்போது, ‘‘கலைஞர் அறி​வால​யத்​துக்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வரி செலுத்​து​மாறு மாநக​ராட்​சி ​நோட்​டீஸ் அனுப்பி இருந்​தது. அறி​வால​யத்​தில் பொது​ மக்​கள் பயன்​படுத்​தும் நூலகம் இருப்​ப​தால், வணி​கப்பயன்​பாட்டு வரியை நீக்​கு​மாறு பலமுறை மனு அளித்தும் மாநக​ராட்சி நடவடிக்கை எடுக்​க​வில்லை. வரியை குறைத்​தால், வரியை முழுமையாகச் செலுத்த தயா​ராக உள்​ளோம்’’ என்கின்றனர்.