திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி!

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்புப் படையினர் 28 பேரை மீட்டுள்ளனர். மின் கசிவு விபத்துக்குக் காரணம் அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dindigul Hospital Fire Accident sgb

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. நான்கு தளங்கள் கொண்ட தனியார் மருத்துவமனையில் 1, 2, மற்றும் 3வது தளங்களில் தீ பரவியுள்ளது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 28 பேரை மீட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டிடத்தில் யாரும் இல்லை என்பதையும் உறுதிசெய்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட மருத்துவமனையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களையும் சந்தித்திருக்கிறார். திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரும் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார்.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், "காவல்துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் 20 நிமிடங்களில் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். லிப்டில் சிக்கியிருந்து 22 பேர் உள்பட பலரைக் காப்பாற்றி அழைத்து வந்தனர்" எனத் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்து தகவல் கேட்டறிந்தார் என்றும் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பார் என்றும் கூறினார்.

இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் அல்ல என்று மின்வாரிய ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர் எனவும் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கனவை நனவாக்கிய குகேஷ்! செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட் மாஸ்டர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios