நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
School holiday tomorrow: தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
School Leave for Rain
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
School Holiday Latest Update
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் தென்தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளையாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறளியுள்ளது.
Tamilnadu School Holidays
அதன்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விட்டுவிட்டு நாள் முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது. மேலும், நாளையும் கனமழை தொடரும் எனத் தெரிகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
School Holidays Tomorrow
இதன் காரணமாக இந்த மூன்று தென்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை (டிசம்பர் 13ஆம் தேதி) விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடப்பதால், பரீட்சை எழுதும் மாணவர்கள் தவிர மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Rain Red Alert School Leave Announcement
3 தென்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியிர் உத்தரவிட்டுள்ளார்.