கனவை நனவாக்கிய குகேஷ்! செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட் மாஸ்டர்!
Chess Grandmaster Gukesh Biography: உலக செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ். 7 வயதில் கண்ட கனவை நனவாக்கி அசத்தியுள்ள அவரது பயணத்தை இத்தொகுப்பில் காணலாம்.
Chess World Championship 2024
வியாழன் அன்று நடப்பு சாம்பியனான டிங் லிரனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 படத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 18வது கிளாசிக்கல் செஸ் உலக சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அதுவும் மிக இளம் வயதில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
Gukesh in Chess World Championship 2024
14-வது ஆட்டத்தில் வெற்றி பெற்ற குகேஷ், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். குகேஷ் 14-கேமில் கடைசி கிளாசிக்கல் நேரக் கட்டுப்பாட்டு ஆட்டத்தில் வெற்றியை உறுதிசெய்தார். லிரனின் 6.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் குகேஷ் 7.5 புள்ளிகளைப் பெற்றார். ஆட்டம் பெரும்பாலும் டிராவை நோக்கியே சென்றுகொண்டிருந்த நிலையில் லிரனின் கடைசி நேரத்தில் செய்த தவறு குகேஷுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
Who is Gukesh?
இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சதுரங்க உலகில் பல குறிப்பிடத்தக்க பட்டங்களைப் பெற்றுள்ளார். இளைய கிராண்ட்மாஸ்டர்களில் 3வது இடத்தில் இருக்கிறார். செஸ் ரேடிடங்கில் 2700 என்ற மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆவார். பின், 2750 மதிப்பீட்டை முதலில் எட்டிய இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையும் படைத்தார்.
Gukesh wins Chess Championship 2024
2020ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து, அதில் கலந்துகொள்வதற்காக வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் (WACA) பயற்சி எடுத்து வருகிறார். 2023 முதல் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் அவருக்கு ஸ்பான்சர் செய்துவருகிறது.
Gukesh with Viswanathan Anand
சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் குகேஷ். அவரது தந்தை, ரஜினிகாந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். குகேஷின் தாய் பத்மா நுண்ணுயிரியல் துறையில் வல்லுநர். ஏழு வயதில் இருந்தே செஸ் விளையாடி வரும் குகேஷ் தான் விரும்பும் விளையாட்டின் உச்ச சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்.
Gukesh becomes youngest-ever World Champion
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள குகேஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், இணையில்லாத திறமையும், கடின உழைப்பும் இந்த வெற்றியைத் தேடித் தந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.