தமிழகத்தில் அரசியலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள் எனக்கு அது தேவையில்லை, நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை, அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யக்கூடிய எனது பணி தொண்டர்கள், மக்கள் உதவியுடன் தொடரும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜாதி பெயரை நீக்கிய கமல்

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என நடிகர் கமல்ஹாசன், சூளூரைத்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வாக்குகளையும் கனிசமாக பிரித்தது. இந்தநிலையில் கமல்ஹாசனின் செயல்பாடுகளை பிடிக்காமல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதால் கமலின் கூடாரம் காலியாகிவிட்டதாக செய்திகள் பரவியது. இந்தநிலையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மைய கட்சியின் ரத்த தான செயலி மற்றும் இணையதளத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், 40 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் வணிகமாக இருந்த நிலையில் அதனை கடமையாக தனது நற்பணி இயக்கத்தின் மூலம் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார். சிறையில் இருந்தால் மட்டும் தலைவன் அல்ல துறையில் இருந்தாலும் தலைவன்தான், தனது படங்களில் வன்முறை மதம் ஜாதி போதைப்பொருள் உள்ளிட்ட சமூக நலனுக்கு எதிராக உள்ள கருத்துக்கள் தனது படங்களில் தொடர்ந்து இருக்கும் என தெரிவித்தார். ஜாதியை ஒழிக்கும் வகையில் எனது குழந்தைகள் சான்றிதழில் இருந்து அவர்களுக்கு ஜாதி பெயரை நீக்கி விட்டதாகவும் இதை அனைவரும் தொடரும் பட்சத்தில் ஜாதி மறைந்து மனித மற்றும் மனித உறவுகள் மலரும் என தெரிவித்தார். 

அரசியல் என்பது கமிஷன் ஓட்டு மட்டுமல்ல நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்வதும் அரசியல்தான், கமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு மீண்டும் நடிக்க சென்றுவிட்டார் என்று கூறுவோருக்கு எனது தொழில் நடிப்பு என்றும் மேலும் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பது தனக்கு பொருட்டு அல்ல எனவும் என்னிடம் இருப்பதை பிறருக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அதனால் எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.நான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை எனவும் திரையில் சம்பாதித்து எனக்கு போக பிறருக்கு உதவி செய்ய வருவேன். மீண்டும் ஏன் நடிக்க போனீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள் ஏனெனில் அது எனது தொழில். எனக்கு எவ்வளவு பணம் வருகிறது அதில் கட்சிக்கு எவ்வளவு செலவு செய்கிறேன் என்பது வருமான வரித்துறைக்கு தெரியும் எனவும் தெரிவித்தார் இன்கம்டேக்ஸ் மூலம் என்னை மிரட்ட முடியாது எனவும் மேலும் என்னை நீங்கள் மிரட்ட வேண்டும் எனில் எனது அரசியல் கருத்துக்கள் காரணமாக உள்ளது என்ற காரணத்திற்காக வேண்டுமானால் நீங்கள் என்னை மிரட்டலாம் என தெரிவித்தார். அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் மேலும் என்னை அரசியல் நீரோட்டத்தில் கலக்க மாற்றுகிறேன் என்று சொல்கிறார்கள் அது அரசியல் அல்லது சாக்கடை என்றும் அதில் நான் நீந்த மாட்டேன் நான் நீந்துவதற்கு ஏராளமான மக்களிடம் அன்பு இருக்கிறது அதே நேரத்தில் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வேன் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்காக பாஜகவுடன் அதிமுக மோதல்..! வருத்தப்பட்ட திமுக அமைச்சர்