திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ்? உடன்பிறப்புகள் செம ஹேப்பி!

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை தீபாவளி போனஸ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Deepavali bonus for dmk executives smp

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆட்சியில் இல்லாதபோதே திமுக கூட்டணி 39 தொகுதிகளை வென்றது. இந்த முறை ஆட்சியில் இருப்பதால், 40க்கு 40ஐயும் வெல்ல வேண்டும் என்பது ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது.

எனவே, தேர்தல் பணிகளை இப்போதே திமுக தொடங்கி விட்டது. இருப்பினும், முதல்வர் ஸ்டாலின் நினைத்த வெற்றியை பெற வேண்டுமானால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். ஆனால், திமுக நிர்வாகிகள் பலரும் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே, தேர்தலுக்கு முன்பாக கட்சி நிர்வாகிகளை குஷிப்படுத்த திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் வழங்கப்படவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக, திமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை தீபாவளி போனஸ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தீபாவளியின் போது, இதுபோன்றதொரு ஏற்பாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் நடந்தது. தற்போது அவர் சிறையில் உள்ளதால், சிலபல லட்டுகளாவது கிடைத்தால் கூட பரவாயில்லை என்று எண்ணியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ்களே சென்றுள்ளதாம். இதனால், அவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

இலங்கை அதானி துறைமுகத்துக்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா!

திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டதாம். இந்த தொகையானது மாவட்ட செயலாளர்கள் மூலம் விநியோகிக்க திட்டமிட்டு அப்பணிகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள்,  பேரூராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள்,  ஒன்றிய நிர்வாகிள், வாக்குச்சாவடி கமிட்டி என ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை தீபாவளி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

கட்சி மேலிடம் வழங்கிய தொகையுடன் சேர்த்து அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் தங்களது கைகளில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேர்த்து வழங்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்பதால், அமைச்சர்களுக்கு பதிலாக சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் ஒரு தொகையை சேர்த்து வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios