தமிழ்நாடு அரசு, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள தனிமனைகளுக்கு வரன்முறை செய்யும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது. onlineppa.tn.gov.in மற்றும் www.tcponline.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tamil nadu land regularization : தமிழ்நாடு அரசு, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள தனிமனைகளுக்கு வரன்முறை செய்யும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள தனிமனைகளை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம், அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவதும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் திட்டமிடப்படாத மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள்
இது தொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் "20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
அனுமதியற்ற மனைப்பிரிவு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்ககள், 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது போன்று, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.thhillareala youtreg.inஎன்றஇணையதளத்திற்குபதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
மனை உரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் (பத்திரப் பதிவு, விற்பனை ஒப்பந்தம் போன்றவை).
மனையின் அளவ் மற்றும் எல்லைகளைக் குறிப்பிடும் வரைபடம்.
அனுமதியற்ற மனைப்பிரிவு 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்.
அரசு குறிப்பிடும் பிற ஆவணங்கள்
