நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொலை குற்றவாளிகளுக்கு தண்டைனை வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொலை குற்றவாளிகளுக்கு தண்டைனை வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் கந்தவட்டிக்கு கடன் வாங்கிருந்த நிலையில், அந்த கும்பல் தொழிலாளியின் மகளை மிரட்டி பாலியல் பலத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக சொல்லப்டுகிறது.
மேலும் படிக்க: சூப்பர் அறிவிப்பு.. மார்ச் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:
இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேலுச்சாமி கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் கொடுத்து காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது மர்மகும்பலால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பல் சிவக்குமார், பூபதி, ராஜேந்திரன், மிலிட்டரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ஆமையன் ஆகிய 7 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் படிக்க: மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை.. அனாதையான ஒன்றரை வயது குழந்தை.. நெல்லையில் பரிதாபம்
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி சிவக்குமார், மிலிட்டரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ராஜேந்திரன், பூபதி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 20 ஆயிம் அபராதம் விதித்திக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Gold Rate Today :குட் நியூஸ்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. சவரனுக்கு ரூ.200 குறைந்தது..
இரண்டை ஆயுள் தண்டனை விதிப்பு:
இந்த வழக்கின் ஆறாவது குற்றவாளியான பூபதி தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விதிக்கப்பட்ட ஏ1 குற்றவாளியான சிவக்குமார் பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஆமையன் என்பவர் வழக்கு விசாரணை நடந்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அந்த திட்டம் வேண்டவே வேண்டாம்.. ஒரு போதும் அனுமதிக்கவே மாட்டோம்.. மத்திய அரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்..
