Gold Rate Today : மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 38,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 24 ஆம் தேதி போர் தொடுக்கிய நிலையில் இரண்டு வாரங்களை கடந்து இராணுவ தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

காலை நிலவரம்:
அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,895 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,894 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் அதிகரித்து 39,160 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலை நிலவரம்:
இதனிடையே மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,869க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.74.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
