மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?
‘அரசுப் பேருந்துகளில் பணம் கொடுத்துப் பயணம்செய்ய விரும்பும் மகளிருக்கு நடத்துநர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கலாம்’ என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அன்றாடம் அரசு நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இலவச பேருந்து திட்டம் குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தது.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நிற்பதில்லை. பயணிகள் ஏறும் முன்பே பேருந்தை இயக்குகின்றனர். மேலும் பயணத்தின் போது தகாத வார்த்தைகளால் நடத்துனர்கள் பேசுகிறார்கள் என்று அடுக்கடுக்காக குற்ற சாட்டுகள் தற்போது வரை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் பணம் கொடுத்துப் பயணம்செய்ய விரும்பும் மகளிருக்கு நடத்துநர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கலாம் என்று போக்குவரத்துத்துறையில் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !