சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தால் சவுக்குசங்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, கைதிகள் உரிமைகள் மன்றத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !
தொடர்ந்து சவுக்கு சங்கர் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி எழுத்துப்பூர்வமான கடித்தத்தை சங்கரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடலூர் சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது. அதன் பேரில் சவுக்கு சங்கர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !