சட்டப்பேரவைக்கு செல்கிறீங்களா.? இல்லையா.? கேள்வி எழுப்பும் மக்கள் -அதிமுக எம்எல்ஏக்கள் ஆதங்கம்

தமிழக சட்டப்பேரவை நேரலையில் அதிமுக உறுப்பினர்கள் காட்டப்படாததால் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் அரசு எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று எத்தனிப்பதாகவும், இது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Complaint that ADMK MLAs are being blacked out in Tamil Nadu Legislative Assembly live KAK

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் யார் அந்த சார் என்ற பேஜ் அணிந்தும் கருப்பு சட்டை அணிந்தும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக சட்டப்பேரவை நேரலை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்களின் முகத்தை கூட காட்டவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினார்கள். 

Complaint that ADMK MLAs are being blacked out in Tamil Nadu Legislative Assembly live KAK

முகத்தை கூட காட்டவில்லை

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் உதயக்குமார், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை இந்த மன்றத்தில் எடுத்து வைத்து அதை நீங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தது, அது தொகுதி மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.  ஆனால் நேற்று முழுவதும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள், எந்த கேள்வியும் நீங்கள் ஒளிபரப்பு செய்யாத காரணத்தினால் சட்டமன்றத்துக்கு போகலையா? என  அந்த தொகுதியில் இருக்கிற மக்கள் கேட்கிறார்கள். ஆகவே இந்த அவை என்பது ஆளுகிற கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் பொதுவானது. இந்த பேரவை தலைவர் பொதுவானவர். 

ஆளுங்கட்சி வரிசையோடு முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?

ஆகவே எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தொகுதி சார்ந்த கோரிக்கைகளை, கேள்வி எழுப்புகிற போது அதை நீங்கள் ஏன் மாற்றம் செய்தீர்கள்சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் நேரலையின் போது அதிமுக உறுப்பினர்கள் காட்டப்படாததால் நாங்கள் சட்டப்பேரவைக்கு செல்கிறோமா இல்லையா என மக்கள் கேள்வி கேட்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. 

Complaint that ADMK MLAs are being blacked out in Tamil Nadu Legislative Assembly live KAK

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா திரு. ஸ்டாலின் அவர்களே? என்றும் எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? "#யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல

மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! என்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios