கோவையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை! ஐயையோ! முதல்வரை பார்த்து அண்ணாமலை இப்படி சொல்லிட்டாரே!
சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(48). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக கூறிவிட்டு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த கும்பல் அவரது வெட்டி படுகொலை செய்து விட்டு உதயகுமாரின் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வரும் திங்கட்கிழமை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
இதையும் படிங்க: Crime: கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது. சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.
காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில், கையாலாகாத முதலமைச்சர் என்றே அறியப்படுவார் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.