School Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வரும் திங்கட்கிழமை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை (அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Panimaya Matha Church Festival 2024
உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கோலாகலமாக 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் இலங்கை, உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
Thoothukudi Local Holiday
அந்த வகையில் தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், விழாவின் 10ம் நாளான வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்மீக சுற்றுலா, சுபநிகழ்ச்சி போகனுமா? இனி அரசு பேருந்தை எடுத்துட்டு போங்க! போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு!
School Holiday
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டு அறிவிப்பில்: தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
School Working Day
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! சென்னையில் வாடகை வீட்டில் நடந்த ஐடெக் விபச்சாரம்! கஸ்தூரி சிக்கியது எப்படி?