சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி... பங்கேற்று கண்டு ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

cm stalin saw cultural performances at chennai sangamam Namma Uru festival held at chennai

சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நேற்று (15.1.2023) சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: திருவள்ளுவா் தினம்... தமிழகம், புதுவையில் இன்று இறைச்சி கடைகளை திறக்க தடை!!

தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... அறிவித்தது போக்குவரத்து காவல்துறை!!

இந்த நிகழ்ச்சியில் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios