தவிக்கும் 1.5 கோடி மக்கள்; 2000 கோடி நிதி கேட்டு மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Letter to Modi : தமிழகம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 2000 கோடி உடனடி நிதி வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே "ஃபெஞ்சல் புயல்" காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சோகமும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் நோக்கி ஃபெஞ்சல் புயல் நகர்ந்து வந்தாலும் தமிழகத்தின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நாளை சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்திருந்தாலு, எதிர்வரும் சில நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை வரலாறு கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடி உள்ள நிலையில், சுமார் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழியுள்ளதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அது மட்டுமல்லாமல் தேசத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு என்.டி.ஆர்.எப் நிதியிலிருந்து உடனடியாக 2000 கோடி அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடைபெறுவதற்காக விடுவிக்குமாறு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் 50cm மேல் ஒரே நாளில் மழை பெய்தால் அங்கு அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க 38 ஆயிரம் அரசு பணியாளர்களும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் அனுபவம் பெற்ற மீட்பு படையினரும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனேக இடங்களை நானும் நேரில் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மாநில அரசு தற்போது 2,475 கோடி ரூபாய் இந்த புனரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளதாகவும். ஆகையால் 2000 கோடி NDRFல் இருந்து உடனடியாக அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு காணாத மழை; நாளை Dec 3 பள்ளிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில்?