வரலாறு காணாத மழை; நாளை Dec 3 பள்ளிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில்?
Tamil Nadu Rains : கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரையில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை கனமழை பெய்து வருகின்றது.
கட்டுக்கடங்காத மழையால் தமிழகத்தை கலங்கடித்து வருகின்றது "ஃபெஞ்சல் புயல்" என்றால் அது மிகையல்ல. கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வந்தது. இப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையானது சற்று முன்னதாகவே தமிழகத்தில் தொடங்கிய நிலையில், தற்பொழுது அநேக இடங்களில் அதிக கனத்த மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் தமிழக வெதர்மேன் அண்மையில் வெளியிட்ட ஒரு தகவல்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஊத்தங்கரையில் மட்டும் சுமார் 500 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூர் என்கின்ற இடத்தில் சுமார் 330 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கன மழை அங்கு பெய்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக ஊத்தங்கரையில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இன்றும் புரட்டிப்போட காத்திருக்கும் ஃபெஞ்சல் புயல் சின்னம்.! இத்தனை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டா.?
இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் புதுவை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பேச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களை தவிர பரவலாக மழை சற்று குறைந்து வரும் நிலையில், நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!