Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களின் மன நலன் காக்கும் மனம் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட108 அவசரகால ஊர்திகள் மற்றும் மாணவர்களின் மன நலம் காக்கும் மனம் திட்டம் ஆகியவையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து, மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்திற்காக கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். 

cm stalin launched manam project to protect mental welfare of students
Author
First Published Dec 22, 2022, 11:56 PM IST

மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட108 அவசரகால ஊர்திகள் மற்றும் மாணவர்களின் மன நலம் காக்கும் மனம் திட்டம் ஆகியவையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து, மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்திற்காக கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல நல ஆதரவு மன்றங்கள் அமைத்து, மாணவர்களின் மன நலம் காக்கும் மனம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு... அறிவித்தது தமிழக அரசு!!

மேலும், சென்னை அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் ஒப்புயர்வு மையத்தினை முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கான முப்பரிமான வரைபடத்தை வெளியிட்டார். அதை தொடர்ந்து 22.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) மற்றும் நட்புடன் உங்களோடு – மனநல சேவை (14416) ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதையும் படிங்க: கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்... மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!!

மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தற்காக காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். அதை தொடர்ந்து மன நல சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பாமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மன நலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தையும் அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டிற்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் – சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios