கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்... மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!!
கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா ஒமைக்ரான் மாறுபாடான BF7 திரிபு வைரஸ் சீனாவில் தற்போது வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இது சீனாவில் மட்டுமின்றி பிற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு... அறிவித்தது தமிழக அரசு!!
இதுக்குறித்து பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும். இது BA-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் BF-7 வகையான கொரோனா தொற்று BA-5-ன் உள்வகையாகும். இத்தகைய BA-5 தொற்று தமிழ்நாட்டில் ஜீன், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட இந்த தொற்றின் வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருக்கிறது. தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும்.
இதையும் படிங்க: காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் மூடப்படும்... எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மெய்யநாதன்!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கோவிட் பரிசோதனை செய்யவும், கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழுமரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளூயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று (ILI & SARI) ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம். மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.