பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு... அறிவித்தது தமிழக அரசு!!
பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது, ரூ.1000 பொங்கல் பரிசுடன் சேர்ந்து வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: உதயநிதி நாட்டுக்காக என்ன செய்தார்.!நயன்தாராவை கட்டிப்பிடித்தார்,ஹன்சிகாவை காதலித்தார்- செல்லூர் ராஜூ விமர்சனம்
இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் மூடப்படும்... எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மெய்யநாதன்!!
இதன் மூலம் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அரசுக்குச் இதன்மூலம் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜன.2 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். அவரை தொடர்ந்து அதே நாளில் பிற மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் பொங்கல் பரிசு வழங்குவதை தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.