Asianet News TamilAsianet News Tamil

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

அருணாச்சலப்பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

cm stalin announced a 20 lakhs for pilot who died in helicopter crash
Author
First Published Mar 17, 2023, 7:54 PM IST

அருணாச்சலப்பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர் ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன்.

இதையும் படிங்க: நெல்லை அருகே சொத்தை அபகரித்த மகன்! - தாயும். தங்கையும் தீக்குளிக்க முயற்சி!

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன். தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முசிறி அருகே மக்கள் நலம் வேண்டி நடைபெற்ற மகா சண்டி யாகம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

முன்னதாக அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து  நேற்று காலை 9  மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட 15 நிமிடங்களில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios