Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000... அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்ந்தெடுக்கப்படும் 1000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

cm stalin announced 1000 per month for govt school students
Author
First Published Apr 5, 2023, 8:03 PM IST | Last Updated Apr 5, 2023, 8:03 PM IST

தேர்ந்தெடுக்கப்படும் 1000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அனைவருக்கும்‌ ஐஐடிஎம் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய  முதல்வர் மு.க.ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐஐடி சென்னையில் பிஎஸ் தரவு அறிவியல் படிக்க, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 பேர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க: 2 லட்சம் பத்தாது.. 5 லட்சம் கொடுங்க.! நங்கநல்லூர் விபத்து - தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை

10 ஆம் வகுப்புப் படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்படும். குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். அவர்கள் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏக்களுக்கு பலாபழம் கொடுத்த அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம்... இணையத்தில் பரவும் புகைப்படங்கள்!!

அவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பைத் தொடரும்போதும் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதிகள் கிடைக்கப்பட வேண்டும். கல்வி சமமாகக் கிடைத்தால்தான், அவர்களுக்கு அனைத்துமே சமமாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios