Asianet News TamilAsianet News Tamil

2 லட்சம் பத்தாது.. 5 லட்சம் கொடுங்க.! நங்கநல்லூர் விபத்து - தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை

25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கியபோது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. - அண்ணாமலை, மாநில பாஜக தலைவர்.

Bjp president annamalai request tn govt in nanganallur temple accident
Author
First Published Apr 5, 2023, 7:24 PM IST | Last Updated Apr 5, 2023, 7:24 PM IST

சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி உள்ளனர். சுவாமியை நீராட்டும் நிகழ்விற்காக இவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் முழ்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 5 இறந்துவிட்டனர். முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த விபத்துக்கு நிவாரணம் அறிவித்தார்.

Bjp president annamalai request tn govt in nanganallur temple accident

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி திருவிழாவின்போது நடைபெற்ற விபத்தில், 5 பேர் உயிர் இழந்துள்ளனர். 

25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கியபோது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. திருவிழாக்களின் போது, மக்களுக்கு காவல் துறையினர் இனிமேல் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

Bjp president annamalai request tn govt in nanganallur temple accident

மேலும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக அரசு கொடுக்கும் 2 லட்சம் ரூபாயை, 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மறைந்தவர்கள் அனைவரும் ஆன்ம அமைதி பெறவும், அவர்களின் குடும்பத்திற்கு மன ஆறுதலைத் தரவும் இறைவனை வணங்கி வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios