எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பான் இந்தியா வெற்றி பெற்றது புஷ்பா திரைப்படம்.
அல்லு அர்ஜுன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது புஷ்பா படம். தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது.
குறிப்பாக சாமி சாமி பாடல் ராஷ்மிகாவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து என்றே கூறலாம். பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா தற்போது அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 தி ரைஸ் படத்தின் சூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்க தற்போது வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் சுகுமார் திருப்தி அடையவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க வேண்டுமா ? அல்லது தற்போது படமாக்கப்பட்ட அனைத்தையும் அழிக்க வேண்டுமா என்று திரைப்படத் தயாரிப்பாளர் இப்போது பரிசீலித்து வருவதாகவும் செய்தி கசிந்துள்ளது. புஷ்பா 2 படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், Siasat.comன் மற்றொரு அறிக்கையின்படி, புஷ்பா 2க்கான படப்பிடிப்பு இப்போது சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. இதனால் இந்த வருடம் படம் வெளியாகாமல் போகலாம். இருப்பினும், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா அல்லது புஷ்பா 2 ஒத்திவைக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த மாதம், புஷ்பா இயக்குனர் சுகுமார், புஷ்பா 2 படத்திற்காக ஒரு முக்கிய பாலிவுட் ஸ்டாரை படத்தில் சேர்க்க திட்டமிட்டார் என்றும், அது ஒருவேளை அஜய் தேவ்கன் அல்லது வேறு யாராவது இருக்கும் என்றும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா