Durga Stalin had darshan at the Kollur Mookambika Amman temple : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MK Stalin Wife Durga Stalin Offer Prayer at Kollur Mookambika Amman Temple : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். அடிக்கடி கோயில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதுவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோயில்களில் தான் அதிகளவில் தென்படுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சென்று வரும் நிலையில் இப்போது கர்நாடகா மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை அம்மன் (Kollur Mookambika Amman Temple) கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டுள்ளார். அவருடன் அவரது நெருங்கிய உறவினர், நண்பர்கள் சென்றதாக சொல்லப்படுகிறது. துர்கா ஸ்டாலின் கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தை. அவரது மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சனாதன தர்மம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அம்மா கோயில் கோயிலாக சென்று வருகிறார்.

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து.! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இப்படி வீட்டில் இருப்பவர்களது கருத்து கூட ஒத்துப் போகாமல் இருக்கும் நிலையில் துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோயிலுக்கு விசிட் அடிப்பதை எல்லோருமே கவனிக்கிறார்கள். துர்கா ஸ்டாலின் உடன் வந்த அவரது நண்பர்கள் மூகாம்பிகை அம்மனுக்கு (Kollur Mookambika Amman Temple) தங்க கிரீடம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், தனியாக அம்மனுக்கு கிரீடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்று சென்றிருக்கிறார்கள்.

'கூட்டணிக்காக தவம்' அதிமுகவை அண்ணாமலை குறிப்பிடவில்லை.! சமாளிக்கும் எடப்பாடி

மூகாம்பிகை அம்மன் கோயில் ஸ்பெஷல்:

1200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் தான் இந்த கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில். மூகாம்பிகை தேவி ஆதி மாயையாக இந்த கோயிலில் வீற்றிருக்கிறார். மூகாம்பிகை அம்மனை வாக்குதேவதா (பேச்சு மற்றும் எழுத்துக்களின் தேவதை) என்று அழைக்கிறார்கள். பார்வதி தேவிக்கு கட்டின ஒரே கோயில் இதுதான். சக்தி, சிவன் ரெண்டு பேரும் சேர்ந்த ஜோதிர்-லிங்கம் வடிவமாக இந்த கோயிலில் இருக்கிறார்கள். பார்வதி, சரஸ்வதி, லட்சுமி என்று மூன்று ரூபத்தில் தேவியை வணங்குகிறார்கள். ஜோதிர்லிங்கம் வலது பக்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரையும் குறிக்கும். இடது பக்கம் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூணு பேரையும் குறிக்கும்.

2026 இல் திமுக அரசை மாற்ற உறுதி ஏற்போம்! த.வெ.க. தலைவர் விஜய் மகளிர் தின வாழ்த்து!

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என்று பலரும் இந்த கோயிலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள். அப்படியொரு மகிமை வாய்ந்த கோயில் தான் இந்த மூகாம்பிகை அம்மன் கோயில். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.