மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். திமுக அரசு ஏமாற்றுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார். 2026இல் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற உறுதி ஏற்போம் என்றும், எந்த நிலையிலும் பெண்களுடன் நிற்பேன் என்றும் விஜய் கூறியுள்ளார்.
பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய திமுக அரசை 2026இல் ஆட்சியில் இருந்து அகற்றவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ள விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல் முறையாக திமுகவின் பெயரைச் சொல்லி நேரடியாக விமர்சித்துள்ளார் விஜய். தனது வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
"எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுக்க இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கை, தோழிகளுக்கு இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே...
பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷமாக இருக்க முடியும். பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் இருக்கும்போது எந்த சந்தோஷம் இருக்காதுதானே என நீங்கள் நினைப்பது புரிகிறது. நீங்களும் நாமும் சேர்ந்துதான் இந்தத் திமுக அரசைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது.

இங்கு எல்லாமே மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீர்கள். 2026 இல் மகளிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்காக மகளிர் தினமான இன்று உறுதிமொழி ஏற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய மகனாக, அண்ணனாக, தோழனாக, தம்பியாக உங்களுடன் நான் நிற்பேன். வணக்கம்"
இவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
டிகிரி முடித்திருந்தால் போதும், சுப்ரீம் கோர்ட்டில் சூப்பர் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
