அதிமுக ஆட்சியில் Startup கடைசி இடம்.! திராவிட மாடல் ஆட்சியில் முதல் இடம் பிடித்து சாதனை- ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Chief Minister Stalin said that Tamil Nadu has topped the StartUp ranking list KAK

முதல் இடம் பிடித்த திராவிட மாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,  நமது திராவிட மாடல்  ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.

Chief Minister Stalin said that Tamil Nadu has topped the StartUp ranking list KAK

பாய்ச்சலுக்கு சான்று

தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தாமோ.அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Governor Ravi : நாடே ராமர் மயமாகி வருகிறது.! இந்தியர் இதயத்தில் ராம நாமமே ஒலிக்கிறது -ஆளுநர் ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios