முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்ஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று உடல்சோர்வு வயிற்று வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வழக்கமான பரிசோதனைக்காக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ வழக்கமான உடல் பரிசோதனைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் அவர் இன்று வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் வீடு திரும்பினார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1 கிலோ தக்காளி ரூ.60 மட்டுமே.. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..