எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! கண்ணிமைக்கும் நேரத்தில் புதுமண தம்பதி பலி! நடந்தது என்ன?
சிதம்பரம் அருகே புதுமணத் தம்பதிகள் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கலைவேந்தன் (36). இவர் பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி மகள் இளவரசி (30) குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் வீரன் கோயில் திட்டு பகுதியில் தங்களது உறவினர் விசேஷத்திற்காக இருவரும் யமஹா எப்.இசட். பைக்கில் நேற்று சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சித்தலபாடி அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிரே கொடியம்பாளையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!
இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்! தமிழக அரசின் பொங்கல் போனஸ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மேலும் இந்த விபத்து குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். திருமணமான இரண்டே மாதத்தில் கணவர் மற்றும் பெண் எஸ்.ஐ. விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரான துணிசரமேடு கிராமத்தை சேர்ந்த சபரிராஜா(24) நடத்துனர் முத்துராமன் தப்பியோடிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.