அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்! தமிழக அரசின் பொங்கல் போனஸ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 வரை மிகை ஊதியமும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியமும் வழங்கப்படும்.
Government Employee
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
Pongal Bonus
தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள். மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ்! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
Tamilnadu Government
அதேபோல் சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள். கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த அரசாணை வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
Pongal Bonus 2025
அதில் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து, குறிப்பிட்ட ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும்; மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அதாவது 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2000 பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் அல்லது துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Bonus Amount
இந்த அரசாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 2.1.2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.