தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ்! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் போனஸ் போதுமானதல்ல என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
CM Stalin
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் வருகிறது. இதனை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் ஏற்புடையதல்ல. மாநில அரசின் இத்தகைய பாரபட்சமான நிலைப்பாட்டுக்கு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Government Employee
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில்:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'சி' மற்றும் ' டி' பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.1,000 கருணைத் தொகையும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Government
2006-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7,000 போனஸாக பெற்று வருகின்றனர். அதனைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 போனஸ் மட்டும் வழங்குவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் இத்தகைய பாரபட்சமான நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?
Pongal bonus
தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய அரசு வழங்குவது போல் ரூ.7,000 பொங்கல் போனஸாக வழங்க வேண்டும். ஏ&பி பிரிவு அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ் மற்றும் தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி ரூ.7000 பொங்கல் போனஸாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.