Asianet News TamilAsianet News Tamil

நெருங்கும் தீபாவளி பண்டிகை… பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு… விதிமுறைகளை வெளியிட்டது காவல்துறை!!

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. 

chennai police has issued rules and regulations for firing crackers
Author
First Published Oct 13, 2022, 11:59 PM IST

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுக்குறித்த சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்பேரில் வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைகையொட்டி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: மாரிதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த மதுரைக்கிளை… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது காவல்துறை!!

அதன்படி, தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அவசர உதவி எண்;112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்:108 ஆகியவற்றை உடனடியாக தொடர்ப்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி பெரும் ஆசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்ப்டட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். உச்ச நீதிமன்றம் பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வரையிலும் மொத்தம் 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் ெவடிக்க வேண்டும். சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு விதி 89 ன் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணாமலை.. இது தரங்கெட்ட செயல்., பத்திரிகையாளர் கண்ணியத்தை உறுதி செய்யுங்க.. பத்திரிகையாளர் மன்றம் அறிவுரை.

மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். பைக், 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் அருகிலும், பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்த உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாட கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி ஏறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios