வட கிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இன்றுடன் முடியும் அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. இவ்வாண்டில் இதுவரை 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 98 மி.மீ. மழை பெய்துள்ளது. 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது.” என்றார்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவும் மழை பதிவாகி உள்ளது.” என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!
தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை ஏதும் இல்லை.” என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.