ஆர்டர்லிகளை வைத்திருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்டர்லிகளை வைத்திருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிப்பட்ட வாகனங்களில் காவல் துறை ஸ்டிக்கர்கள் ஒட்டுவது, காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவது ஆகியவைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கலவரம் ஏற்பட்ட சக்தி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..

அந்த வழக்கில் காவலர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்துவதை உயர் அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அலர்ட் !! TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம்..

அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக புகார் வந்தால் உள்துறை கூடுதல் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நெல்லையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் 39 காவலர்கள் ஆர்டர்லியாக பணியாற்றி வருவதாக புகார் கடிதம் வந்துள்ளதையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.