சென்னையில் ட்ரோன்கள் பறக்கவிட தடை.. எத்தனை நாள் இந்த தடை அமலில் இருக்கும்? என்ன காரணம்!
சென்னையில் சில பகுதிகளில், குறிப்பிட்ட தேதிகளில், ட்ரான்களை பறக்கவிட தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை.

பேரிடர் அபாயத்தைக் குறைப்பது தொடர்பான ஜி-20 பணிக்குழுக் கூட்டம், வருகின்ற ஜூலை 24ம் திங்கட்கிழமை முதல் ஜூலை 26ம் தேதி புதன்கிழமை வரை சென்னை, மாமல்லபுரத்திலும் நடைபெறவுள்ளது. இதில் பணிக்குழுக் கூட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரத்தில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல், கிண்டி மற்றும் ஷெரட்டன் கிராண்ட் ஆகிய இடங்கள், வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் தங்கும் இடங்களாகவும் மற்றும் கூட்டங்களுக்கான இடங்களாகவும் உள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
குட்நியூஸ்.. முதியோர், கைப்பெண்கள் உதவித்தொகை உயர்வு.. எந்த மாதத்தில் இருந்து தெரியுமா?
ஆகவே பாதுகாப்புக் கருதி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, வெளிநாட்டுப் பிரமுகர்கள் தங்கும் இடங்கள், மற்றும் அவர்கள் வழித்தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் ஜூலை 23, 2023 முதல் ஜூலை 26, 2023 வரை அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி சாதனங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஜி-20 மாநாடு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி நகரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த 2023ம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மற்றும் 10ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சில்லறை இல்லை என்று கூறும் பக்தர்களிடம் கூகுள் பேயில் பணம் அனுப்ப சொல்லி அத்து மீறும் திருநங்கைகள்