சிசிடிவி தொழில் செய்து வந்த தொழிலதிபர் சிரஞ்சீவி, கடன் பிரச்சனை காரணமாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா(56). இவர் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் சிசிடிவி கேமராக்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதிக கடனை பெற்று இந்த தொழிலை செய்து வந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் வாங்கிய கடனை மீண்டும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். கடனை கொடுத்தவர்களும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் வேறு வழியில்லாமல் நேற்று இரவு சிரஞ்சீவி, நேற்று இரவு மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் சம்பவம் அந்த குடியிருப்பில் இருப்பவர்கள் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிரஞ்சீவி தற்கொலை செய்தவற்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். குறிப்பாக அந்த கடிதத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் நான் என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும், எங்களுடைய இறப்பிற்கு யாரும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஏதாவது தொல்லை கொடுத்துள்ளனாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.