MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் வசூல் மழை! 3 நாள்களில் இத்தனை கோடியா? தலையில் அடித்துக் கொள்ளும் அன்புமணி

வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் வசூல் மழை! 3 நாள்களில் இத்தனை கோடியா? தலையில் அடித்துக் கொள்ளும் அன்புமணி

TASMAC Diwali Sale: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக டாஸ்மாக் கடைகளில் மூன்று நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை விற்பனையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 22 2025, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ.438 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தீபாவளி டாஸ்மாக் விற்பனை
Image Credit : our own

தீபாவளி டாஸ்மாக் விற்பனை

அதாவது தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு தமிழ்நாட்டு மக்களை திராவிட மாடல் அரசு சீரழித்து வைத்திருக்கிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டு தான் இதுவாகும்.

Related Articles

Related image1
தப்பி தவறி கூட வெளியே வராதீங்க! அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த 14 மாவட்ட மக்கள் உஷார்! வானிலை கொடுத்த வார்னிங்!
Related image2
தீபாவளியை வெடி வெடிச்சு கொண்டாடாம; சரக்கடிச்சு கொண்டாடிருப்பாங்க போல! யம்மாடியோ இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
35
மதுரை மண்டலத்தில் அதிகம்
Image Credit : our own

மதுரை மண்டலத்தில் அதிகம்

தீப ஒளித் திருநாளுக்கு இரு நாள்கள் முன்பாக கடந்த 18-ஆம் தேதி ரூ.230.06 கோடி, அதற்கு அடுத்த நாள் 19-ஆம் தேதி ரூ.293.73 கோடி, தீப ஒளி நாளில் ரூ.266.06 கோடி என மொத்தம் 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இதில் சென்னை மண்டலம் ரூ.158.25 கோடி, திருச்சி மண்டலம் ரூ. 157.31 கோடி, சேலம் மண்டலம் ரூ.153.34 கோடி, மதுரை மண்டலம் ரூ.170.64 கோடி, கோவை மண்டலம் ரூ.150.31 கோடி என்ற அளவில் பங்களித்திருக்கின்றன.

45
ஏழைக் குடும்பங்கள் எங்கிருந்து முன்னேறும்?
Image Credit : our own

ஏழைக் குடும்பங்கள் எங்கிருந்து முன்னேறும்?

தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டம் என்று போற்றப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.13,000 கோடி, அதாவது ஒரு நாளைக்கு ரூ. 35.61 கோடி. 3 நாள்களுக்கு கணக்கிட்டால் ரூ.106.86 கோடி. ஏழைக் குடும்பங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கும் தொகையை விட, 7.39 மடங்கு அதிக தொகையை மது வணிகம் என்ற பெயரில் ஏழைக் குடும்பங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது. இவ்வாறு மதுவைக் கொடுத்து மக்களிடமிருந்து பணத்தைப் பறித்தால் ஏழைக் குடும்பங்கள் எங்கிருந்து முன்னேறும்?

55
அன்புமணி விமர்சனம்
Image Credit : Asianet News

அன்புமணி விமர்சனம்

ஒன்று மட்டும் உறுதி.... தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை. அதனால் தான் மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் அறத்தை திராவிட மாடல் அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் நிலையில், அடுத்து பா.ம.க. ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
Recommended image2
TASMAC: இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
Recommended image3
Suburban Trains: சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
Related Stories
Recommended image1
தப்பி தவறி கூட வெளியே வராதீங்க! அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த 14 மாவட்ட மக்கள் உஷார்! வானிலை கொடுத்த வார்னிங்!
Recommended image2
தீபாவளியை வெடி வெடிச்சு கொண்டாடாம; சரக்கடிச்சு கொண்டாடிருப்பாங்க போல! யம்மாடியோ இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved