- Home
- Tamil Nadu News
- தீபாவளியை வெடி வெடிச்சு கொண்டாடாம; சரக்கடிச்சு கொண்டாடிருப்பாங்க போல! யம்மாடியோ இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
தீபாவளியை வெடி வெடிச்சு கொண்டாடாம; சரக்கடிச்சு கொண்டாடிருப்பாங்க போல! யம்மாடியோ இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மண்டல வாரியாக, மதுரை மண்டலம் முதலிடம்.

டாஸ்மாக் கடைகள்
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும். அதேபோல் வார இறுதி நாட்களில் ரூ.100 முதல் ரூ.150 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகும். இந்த துறை வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருந்து வருகிறது.
தீபாவளி மது விற்பனை
அதுமட்டுமல்லாமல் பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. மேலும் எந்த மண்டலத்தில் அதிக விற்பனையாகியுள்ளது என்பதை பார்ப்போம்.
ரூ.789க்கு மது விற்பனை
இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 18-ம் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ம் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும், நேற்று ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.
மதுரை மண்டலத்தில் அதிகம்
மண்டலம் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியும் மது விற்பனையாகியுள்ளது. எப்போதும் சென்னை மண்டலத்தில் அதிக மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மதுரை மண்டலத்தில் அதிகளவு மது விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பித்தக்கது.