- Home
- Tamil Nadu News
- தப்பி தவறி கூட வெளியே வராதீங்க! அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த 14 மாவட்ட மக்கள் உஷார்! வானிலை கொடுத்த வார்னிங்!
தப்பி தவறி கூட வெளியே வராதீங்க! அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த 14 மாவட்ட மக்கள் உஷார்! வானிலை கொடுத்த வார்னிங்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை விடாமல் ஊத்தி வருகிறது.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை
இந்நிலையில் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் 17.4 செ.மீ மழை
தமிழகத்தில் கடந்த 21 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ., ராணிப்பேட்டை கலவையில் 10 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரி காலாப்பேட்டையில் 25 செ.மீ., மழை பதிவானது. தமிழகத்தில் விடாமல் கனமழை பெய்து வருவதால் 5 மாவட்ட பள்ளிகளுக்கும், 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.